என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆ.ராசாவை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
- நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது
- ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சங்கரன்கோவில்:
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
அகில பாரத அய்யப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அகில பாரத அய்யப்பா சங்க செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வன்னிய ராஜன், சாரதி ராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு, சைவ சித்தாந்த சபை தலைவர் சண்முகவேல் ஆவுடையப்பன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
தென்னிந்திய செங்குந்த மகாஜன துணைத் தலைவர் மாரிமுத்து, பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோமதி அம்பிகை மாத சங்க அமைப்பாளர் பட்ட முத்து, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர் கோபால், சைவ சித்தாந்த சபை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத அய்யப்பா சேவா சங்க பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, நிர்வாகிகள் மாரிமுத்து, அருண், சுப்பிரமணியன், இந்து முன்னணி நகரத் தலைவர் சங்கர் மற்றும் பெண்கள், ஆடித்தவசு மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.