என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுக்கரை மார்க்கெட்டில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரியும் குதிரைகள்

- நள்ளிரவு நேரங்களில் கதவை தட்டுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
- மதுக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குனியமுத்தூர்,
மதுக்கரை மார்க்கெட் பகுதி ஏராளமான வீடுகள் அடங்கிய பகுதியாகும்.
எந்த நேரமும் நான்கு சக்கர வாகனங்களும், 2 சக்கர வாகனங்களும், பேருந்துகளும் அப்பகுதி யை கடந்து சென்று கொண்டிருக்கும். இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குதிரை கூட்டங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.
மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் குதிரை கூட்டங்கள் பள்ளி மாணவ, மாணவிகளை துரத்துவதால் அவர்கள் மிரண்டு. போய் ஓடும் சூழ்நிலை உள்ளது.
மேலும் சாலையை வழிமறித்துக் கொண்டு குதிரை கூட்டங்கள் நிற்பதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதுதவிர இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் குதிரைகள் கூட்டமாக வருவதை கண்டு தடுமாறி கீழே விழும் சூழ்நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூ றியதாவது:- இரவு நேரங்களில் கதவை தட்டும் சத்தம் கேட்டு நாங்க ள் மிரண்டு போய் வந்து கதவை திறந்து பார்த்தால் குதிரை நிற்கிறது.
வாசலில் குதிரை நின்று கொண்டு தன்னுடைய தலையால் கதவை முட்டிக்கொண்டு இருக்கிறது. விரட்டி விட்டாலும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. தெருக்களில் சைக்கிள் செல்லும் குழந்தைகள், குதிரைகள் கூட்டமாக வருவதைக் கண்டு அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவரும் சூழ்நிலை காணப்படுகிறது.
எனவே மதுக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.