என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் பஸ்நிலையம் -அம்மா உணவகத்தில் மேயர் சத்யா அதிரடி ஆய்வு
- ஓசூர் பஸ் நிலையத்தில் மேயர் ஆய்வு செய்தார்.
- சுகாதாரத்தை கடைபிடிக்க உத்தரவிட்டார்.
ஓசூர்,
ஓசூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம் மற்றும் பஸ் நிலையத்தில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை,கழிவறைகளை பார்வையிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில், தூய்மை பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றுஅறிவுறுத்தினார்.
அதனைதொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டு உணவு தயாரிக்கும் சமையலறை,உணவு பொருட்களை நேரடியாக பார்வையிட்டு, சுத்தமானதாகவும், தரமானதாகவும் உணவை தயார் செய்யுமாறு பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஆணையாளர் பாலசுப்ரமணியன்,துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர்கள் ரவி, மல்லிகா தேவராஜ், உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story






