என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தென்காசியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட கணவன்- மனைவி கைது தென்காசியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட கணவன்- மனைவி கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/08/20/1935269-2cellphonetheft.webp)
கைதான கணவன்-மனைவியையும், அவர்களை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
தென்காசியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட கணவன்- மனைவி கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசலில் பயணிகள் பஸ்களில் ஏறும்போது செல்போன் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது.
- 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போன்களை கைப்பற்றினர்.
தென்காசி:
தென்காசி பஸ் நிலையங்களில் குற்றால சீசன் நேரத்தில் கூட்ட நெரிசலில் பயணிகள் பஸ்களில் ஏறும்போது செல்போன் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது.
கணவன்-மனைவி சிக்கினர்
இந்நிலையில் தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தொடர் செல்போன் திருட்டு சம்பந்தமாக தென்காசி குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, போலீசார் பாலமுருகன், முத்துக்குமார், சக்திவேல், சின்னராஜா மற்றும் பெண் போலீஸ் ஜக்கம்மாள்தேவி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த ஒரு பெண்ணையும், அவருடன் நின்றவரையும் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த அமல்ராஜ்(வயது 57) மற்றும் அவரது மனைவி அன்பரசி (45) என்பது தெரிய வந்தது. அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொது மக்களிடம் செல்போன்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போன்களை கைப்பற்றினர்.