என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆலங்குடியில், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
- சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் வேலவன், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட பொருளாளர் இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், தினேஷ்குமார், ஸ்ரீதர், ஜோதிபாசு, அஜித்குமார் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story






