என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 13 பழங்குடி இன குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை: கலெக்டர் வழங்கினார்
- கடலூர் மாவட்டத்தில் 13 பழங்குடி இன குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை கலெக்டர் வழங்கினார்.
- பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்,
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமை தாங்கினார். ட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பட்டா தொடர்பான 211 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 54 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 46 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 63 மனுக்களும், என்.எல்.சி. தொடர்பாக 44 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், இதர மனுக்கள் 41 ஆக மொத்தம் 497 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், சிறுபாக்கம் பகுதியில் சுமார் 20 வருட காலமாக வசிக்கும் பூம்பூம்மாடு வைத்து பிழைக்கும் இந்து-ஆதியன் வகுப்பினை சேர்ந்த 7 குடும்பங்கள் மற்றும் அதே கிராமத்தில் 35 வருடங்களுக்கு மேலாக கூரை வீடு மற்றும் அட்டை வீடுகள் கட்டி வசிக்கும் இந்து-காட்டுநாயக்கன் வகுப்பை சேர்ந்த 6 குடும்பங்கள் என மொத்தம் 13 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்