search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  பூக்களின் விலை கிடு கிடு உயர்வு:    குண்டு மல்லி ரூ.600-க்கு விற்பனை
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் விலை உயர்வினால் குறைந்தளவில் பூக்களை வாங்கி செல்லும் பொது மக்களை படத்தில் காணலாம்.

    கடலூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு: குண்டு மல்லி ரூ.600-க்கு விற்பனை

    • தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது
    • பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி 600 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 500 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க சென்றனர். மேலும், தொடர்ச்சியாக விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    Next Story
    ×