என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொழிலாளர் நல நிதி செலுத்தும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம் -அதிகாரி தகவல்
- திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
- விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தொழி லாளர் நல நிதி செலுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளை பெறவிண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலா ளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்க ளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறது.
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ப்ரீ கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் வழங்குதல், தொழிற்பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய, மாநில அளவில் விளையாட தகுதி பெறுவோருக்கு விளையாட்டு உதவித்தொகை, மாநில அளவில் வெற்றி பெற்ற வர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலிடம் முதல் மூன்றாமிடம் வரை பரிசுத்தொகை வழங்குதல், தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, தொழிலாளிக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, மேலும் தொழிலாளி மற்றும் அவர்களை சார்ந்த வர்களுக்கு திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
இந்த நலத்திட்டங்களில் பயனடைய தொழிலா ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. தொழிலா ளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்ந்து ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியாகும். மேலும் விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியிலோ அல்லது இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தொலைபேசி எண்.044-24321542 மற்றும் செல்போன் எண்.8939782783 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு வேலையளிப்போர் மற்றும் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்