என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையம் பகுதியில் நெற்பயிர்களை சேதப்படுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு
Byமாலை மலர்30 Oct 2022 1:48 PM IST
- சாலைகளில் குதிரைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
- அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து, நடப்பட்டிருக்கும் நாற்றுகளை சேதப்படுத்தி வருகின்றன.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதி சாலைகளில் குதிரைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து, நடப்பட்டிருக்கும் நாற்றுகளை சேதப்படுத்தி வருகின்றன.
ஆலாங்காட்டு வலசு பகுதியில் விவசாயி முருகன் என்பவரது வயலில் நுழைந்த குதிரைகள், அங்கு நட்டு வைக்கபட்டிருந்த நாற்றுகளை தின்றும், மிதித்தும் பெருமளவில் சேதப்படுத்தி உள்ளன.
முருகன் வயலில் 2 ஏக்கர் அளவுக்கு நெற்பயிர்களை மேய்ந்துள்ளது. நடவு கூலி, ஏர் ஓட்ட, உரம் போட என ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
மேலும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரியும் குதிரைகளை நகராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×