search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 1797 வழக்குகளுக்கு தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6.57 கோடி வழங்க உத்தரவு
    X

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் இழப்பீடு பெறுவதற்கான உத்தரவினை வழங்கி போது எடுத்த படம்.

    நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 1797 வழக்குகளுக்கு தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6.57 கோடி வழங்க உத்தரவு

    • நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது.
    • 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது. இதில் 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், நீதிபதிகள் முனு சாமி, கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலை யில் வழக்கு விசாரணை நடைபெற்றது. தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலா ளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.இதில் விபத்து இழப்பீடு வழக்குகள், செக்மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்கு கள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகளுக்கும் சமரச முறையில் தீர்வுகாணப்பட்டது.

    நாமக்கல்லை அடுத்த செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் இன்ஜினியர் சரவணன் (வயது 34). இவர் ஹைட்ராலிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2021- பிப்ரவரி 17-ந் தேதி நாமக்கல் போஸ்டல் நகரில் ஒரு லாரியை பழுது பார்த்து கொண்டிருந்த போது, லாரியின் பின்பகுதி திடீரென அவர் மீது இறங்கியது. இதில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்லை அடுத்த போடி நாயக்கன்பட்டி ராசாபுதூரை சேர்ந்தவர் கார்த்திக் (36) கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அலங்கா நத்தம் பிரிவு நோக்கி பைக்கில் சென்ற போது, கார் மோதி படுகாயம் அடைந்தார். இந்த இரண்டு வழக்கு களையும் மூத்த வழக்கறிஞர் வடிவேல் நீதிமன்றத்தில் நடத்தி வந்தார். நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் உயிரிழந்த என்ஜினி யர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.48.18 லட்சம், படுகாயம் அடைந்த கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு களில் சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறு வதற்கான உத்தரவினை இருவரின் குடும்பத்தின ரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார். மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 2399 வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

    இதில், 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.6.57 கோடி செலுத்தி பைசல் செய்து வைக்கப்பட்டது.

    Next Story
    ×