என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூரில், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
- 5 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.
- சிலர் ஆன்லைன் மூலம் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவ தாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, ஜேடர்பா ளையம், பரமத்தி வேலூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில், பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள கலைமகள் காம்ப்ளக்ஸில் சிலர் ஆன்லைன் மூலம் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவ தாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஆன்லைன் மூலம் லாட்டரி
சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனை யடுத்து லாட்டரி சீட்டுக ளை விற்பனை செய்த பரமத்திவேலூர் தெற்கு தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 42), விஜய் (24), சுல்தான்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார் (33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக ளின் முடிவுகளை வெளியிடுவதற்கு பயன்ப டுத்தப்பட்ட 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.