search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கோட்டையில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    பட்டுக்கோட்டையில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • புதிதாக கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிட கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு நடத்தினோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டுக்கோட்டை நகராட்சி காசாங்குளம் பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிட கட்டுமான பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    பின்னர் லெட்சதோப்பு மற்றும் கரிக்காடு பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு நடத்தினோம்.

    இதையடுத்து நாடியம்மன் ராமசாமி குளம், உத்தண்டி குளம் மற்றும் கோட்டைகுளம் நகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்தும், நாடியம்மன் கோவில் குளம் நகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், என் .ஜி. ஓ காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பட்டுக்கேட்டை நகர மன்ற தலைவர் சண்முகப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×