search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், பஸ்களிலிருந்து காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
    X

    அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சீர்காழியில், பஸ்களிலிருந்து காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை.
    • காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் அதிக ஒலி எழுப்பி சென்று வந்த 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் பறிமுதல் செய்து எச்சரித்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் போது சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

    காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் காற்று ஒழிப்பான்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    அதன் படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்தலை பேரில் சீர்காழியில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தப்படுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் செய்த போது இருபதுக்கு மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிபான்களை பறிமுதல் செய்து இதுபோன்று தொடர்ந்து பயன்படுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலக பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

    Next Story
    ×