search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மாபெரும் சோழா் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்
    X

    தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பான ஆய்வு கூட்டம் நடந்தது.

    தஞ்சையில், மாபெரும் சோழா் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்

    • அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் மணிவாசன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமை ச்சரின் உத்தரவுப்படி, தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவுக்கிணங்க விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

    மேலும், மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சுற்றுலா துறை ஆணையா் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், சுற்றுலா அலுவலா் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×