search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்டங்குடியில், பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    மண்பாண்டங்கள் தயார் செய்யும் பட்டதாரி இளைஞர் துளசேந்திரன்.

    வேட்டங்குடியில், பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

    • மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள கொள்ளிடம், திருமயிலாடி, ஆச்சாள்புரம், வேட்டங்குடி, மாதிர வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொங்கல் பானை, சட்டி உள்ளிட்ட மண் பாண்டங்கள் செய்து அதை சுடும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த நெடுஞ்சாலைதுறையில் பணிபுரிந்து வரும் மாரிமுத்து என்பவரின் மகன் ஏரோநாட்டிகல் பட்டதாரியான துளசேந்திரன் கூறும்போது,

    மண்பாண்டங்களை பயன்படுத்தி அதில் சமைத்து உண்பதன் மூலம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத் தன்மை உருவாகிறது. நமது பாரம்பரிய தொழிலாக இருந்து வந்த இந்த மண்பாண்ட தொழில் கடந்த 15 ஆணடுகளில் நசிந்து வருகிறது.

    சில்வர் மற்றும் அலுமினியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள் எளிதில் கிடைப்பதாக நினைத்து அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    மண்பானை செய்து, அதனை சூலையில் வைத்து சுடுவதற்கு மூல மூலப் பொருட்களான வைக்கோல், வராட்டி, தென்னை மட்டை போன்ற பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    மழைக்கால நிவாரனமாக ரூ.5000 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இந்த நிவாரணம் போதாத நிலையில் அதை உயர்த்தி 10 ஆயிரமாக வழங்கவேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே மண்பாண்ட தொழிலாளர்களிடம் மண்பானை, அடுப்பு, சட்டி உள்ளிட்ட பொருட்களை உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து அதனை அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும்.

    தற்போது தமிழகத்திலேயே எங்களைப் போன்ற மண்பாண்ட தொழிலாளர்கள் 12000 பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள அனைவரையும் கணக்கெ டுப்பு செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×