search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலுப்பக்கோரை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
    X

    புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    இலுப்பக்கோரை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

    • ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.
    • அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

    இதில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலுப்பக்கோரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×