என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![4 புதிய தொழில் பாடப்பிரிவுகளுடன் பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் 4.0 தொழில்நுட்ப மையம் திறப்பு 4 புதிய தொழில் பாடப்பிரிவுகளுடன் பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் 4.0 தொழில்நுட்ப மையம் திறப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/08/1894841-4iti.webp)
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
4 புதிய தொழில் பாடப்பிரிவுகளுடன் பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் 4.0 தொழில்நுட்ப மையம் திறப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
- தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களி லும் மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வாறு மாற்றிட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக தற்போது தமிழகத்தில் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையமும் இதில் அடங்கும். அங்கு நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மண்டல துணை இயக்குனர் செல்வ குமார், உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிளின், பேட்டை ஐ.டி.ஐ. முதல்வர் லட்சுமணன், பொறியாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். பின்னர் ஐ.டி.ஐ வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் மாணவ- மாணவிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
இக்கல்வியாண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள இந்த தொழில் 4.0 தொழில் நுட்ப மையத்தின் மூலம் புதிதாக மேலும் 4 தொழிற்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சி.என்.சி எந்திர தொழில் நுட்ப பணியாளர், அடிப் படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர், உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம், தொழில்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் ஆகியவை இந்த 4 புதிய தொழில் பிரிவுகள் ஆகும்.
இத்தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுவதின் மூலம் தகுந்த வேலைவாய்ப்பினை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்து வளமான இந்தியாவை உருவாக்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.