search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனைமர விதை நடும் பணியில் விதைக்கப்பட்ட விதைகளின் கள ஆய்வு பணி
    X

    ஆய்வு நடைபெற்ற போது எடுத்தபடம்.

    மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனைமர விதை நடும் பணியில் விதைக்கப்பட்ட விதைகளின் கள ஆய்வு பணி

    • கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகின்றனர்.
    • ஆய்வு பணியை மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் பாலன் தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 18 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மர விதைகளை தொடர்ந்து கடற்கரை, தீவு பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தன்னார்வத்துடன் பனை மர விதைகளை கடந்த 18 ஆண்டுகளாக விதைத்து வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகின்றனர். தற்போது வரை 69 லட்சத்து 93 ஆயிரத்து 493 பனை மர விதைகளை விதைத்துள்ளனர்.

    இந்நிலையில் விதைக்கப்பட்ட பனைமர விதைகள் எத்தகைய அளவிற்கு முளைத்துள்ளது என்பது பற்றி கள ஆய்வு செய்யும் பணி பேய்குளம் பகுதிகளில் நடைபெற்றது. கள ஆய்வு செய்யும் பணியை மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் பாலன் தொடங்கி வைத்தார்.

    மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவனம் மாநில தலைவருமான கென்னடி தலைமையில் குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனைத் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில செயலாளர் டேனியல் மோசஸ், துணைத்தலைவர் லிங்கராஜ், மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதி உள்பட பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆய்வுப்பணி பேய்குளம் பகுதிகளில் தொடங்கி பழனியப்பபுரம், மீரான் குளம், கருங்கடல், பனைக்குளம் ஆகிய பகுதிகளிலும் திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கந்தசாமிபுரம், கணேச புரம், ஆலந்தலை, குல சேகரபட்டினம், மணப்பாடு, கடற்கரை பகுதிக ளிலும், சாத்தான்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியதாழை, புத்தன் தருவை, செட்டி விளை, படுக்கப்பத்து, சங்கரன் குடியிருப்பு, ஞானியார் குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, தட்டார்மடம், முதலூர், உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர் காட்சி, தண்டபத்து, செட்டியாபத்து, லட்சுமிபுரம், மெஞ்ஞான புரம், சத்யா நகர், கல்விளை பகுதிகளிலும், கருங்குளம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளிலும், மேலும் கடற்கரை, ஆற்றங்கரை, வாய்க்கால்கரை, குளத்தங்கரை, சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், தனியார் கல்லூரி வளாகங்களிலும் கள ஆய்வு பணி நடைபெற்றது.

    Next Story
    ×