search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் வண்ண பலூன்களை பறக்க விட்டார்.

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • புதுமண தம்பதிகள் பங்கேற்று ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
    • பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சமூக நலத் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நாகப்–பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சுகாதாரத் துறையினர், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட மனித சங்கிலியும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வண்ண பலூன்களை காற்றில் பறக்க விடும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் பங்கேற்ற ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பெண் சிசுக்கொலைகளை தடுப்பது குறித்து விழிப்–புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலம் போட்டிகளும் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

    அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகள் பங்கேற்ற கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    Next Story
    ×