search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில்  மனோ கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்ட போது எடுத்தபடம்.

    சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

    • கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் கருத்தரங்க மாநாடு நடந்தது.
    • ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனியாக விவாத அரங்குகள் அமைக்கப்பட்ட இருந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக் கல்லூரியில் கொரோனா காலத்திற்குப் பிந்தைய உலக நிலவரங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச பல்துறை கருத்தரங்க மாநாடு கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் நடந்தது.

    பாவூர்சத்திரம் செந்தூர் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்றார்.

    பேராசிரியர் சகிலா பானு வாழ்த்தி பேசினார்.கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், கொரோனா காலத்திற்கு பிந்தைய உலக நடப்புகள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்களை மாணவ-மாணவிகள் மனதில் பதிய வைத்து தங்களுடைய கல்வி மேம்பாட்டிற்காகவும் வாழ்க்கையின் முன்னேற்றத் திற்காகவும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மலேசியா நாட்டின் மஹ்சா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டனி சாம்ராட் பேசுகையில், கொரோனா வைரஸ் எவ்வாறு உருமாற்றம் பெறுகிறது, நமது உடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி எடுத்துக் கூறி, கொரோனா பாதித்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய உடல் நிலையை மருத்துவரின் ஆலோசனையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    பின்னர் மலேசியா மஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் சங்கரன்கோவில் மனோ கல்லூரி இடையே பேராசிரியர்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    தென்கொரியா பல்கலைக்கழகப் பேராசிரி யர் டாக்டர் பவட், நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் பிரவீன் சூசை ஆண்டனி ஆகியோர் ஆன்லைன் வழியாகவும் கலந்து கொண்டு பங்கேற் பாளர்களின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு துறைகளுக்கும் தனித் தனியாக விவாத அரங்கு கள் அமைக்கப்பட்டு அந்த துறைகள் பற்றி எடுத்துரைக் கப்பட்டது.

    இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் நவநீத கிருஷ்ணன், பேராசி ரியர்கள் முருகையா, சந்தானகுமார், பேராசிரியர்கள்நெல்லை வக்கீல் முருகேசன், வித்யா, சாரநாதன் பாலமுருகன், லெனின் செல்வநாயகம், பால் மகேஷ், ஆனந்தகுமார், மகாலட்சுமி, நாகம்பட்டி ராம பாண்டி, உதயசங்கர், புஷ்பராணி, அருள் மனோகரி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் செய்திருந்தார்.

    Next Story
    ×