search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க மதுரை மாநாடு அரசியல் திருப்பு முனையாக அமையும்- பழனியில் நத்தம் விசுவநாதன் பேட்டி
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    அ.தி.மு.க மதுரை மாநாடு அரசியல் திருப்பு முனையாக அமையும்- பழனியில் நத்தம் விசுவநாதன் பேட்டி

    • பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க மதுரை மாநாடு அரசியல் திருப்பு முனையாக அமையும் என முன்னாள் அமைச்சர் பேசினார்.

    பழனி:

    பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவி மனோகரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்துகொள்ள தயாராக உள்ளனர். இதற்காக அந்தந்த சட்டமன்ற தொகுதி அளவில் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட் வருகிறது. அதன்படி தற்போது பழனியில் ஆலோசனை செய்யப்பட்டது. மதுரையில் நடக்கும் மாநாட்டில் குறைந்தது 25 லட்சம் பேர் திரளாக கலந்துகொள்வார்கள்.

    எனவே இந்த மாநாடு அரசியல் திருப்புமுனை மாநாடாக அமையும். மேலும் வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதும் உறுதி. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம். ஓ.பன்னீர்செல்வம் முடிந்துபோன சகாப்தம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×