search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பல்வேறு பகுதிக ளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் கட்டுமான திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 ச.அடிகொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளாக 18 தொகுப்புகளை கொண்டு தலா ரூ 5 லட்சம் வீதம் மொத்தம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் செட்டிதாங்கல், கீழக்கடம்பூர் மற்றும் தொரப்பு ஆகிய 3 ஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும்,தொரப்பு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருண்மொழித்தேவன் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் அவ்வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்க்கொண்டு, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது ஒன்றிய குழு தலைவர் சாதியா பர்வின் நிஜார் அகமது , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன் , சுகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×