search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூர் அருகே இளநீர் வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளைகதவை பூட்டாததால் மர்ம கும்பல் கைவரிசை
    X

    வடலூர் அருகே இளநீர் வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளைகதவை பூட்டாததால் மர்ம கும்பல் கைவரிசை

    • ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கடலூர்:

    வடலூர் அருகே ஆபத்தானபுரத்தைச் வடக்கு வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். காலையில் எழுந்து ரூமிலிருந்து வெளியில் வர கதவைத் திறந்தார். கதவை திறக்க முடியவில்லை. இதனால் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டை திறந்து ஆறுமுகம் குடும்பாத்தாரை பொது மக்கள் வெளியில் அழைத்து வந்தனர். வெளியில் வந்த ஆறுமுகம், வீட்டிலிருந்த மற்றொரு ரூமுக்கு சென்றார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். வெளிப்புற கதவை பூட்டாததால் உள்ளே வந்த கொள்ளையர்கள், ரூமில் படுத்திருந்தவர்கள் வெளியில் வராமல் இருக்க கதவை பூட்டி விட்டனர். பின்னர் மற்றொரு ரூமிற்கு சென்ற கொள்ளையர்கள், பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வடலூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×