என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் பழச்சாறு கடைகளில் தரச்சான்று பெற்ற குடிநீரை பயன்படுத்த வேண்டும்: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
- பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
- இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பா னங்கள் மற்றும் பழச்சாறு களை அருந்துகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகள் பரவலாக அதி கரித்துள்ளது. இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். குளிர்பா னங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொரு ட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக பயன்படுத் தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி நாளை உறுதிப்படுத்திட வேண்டும்.
பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது. பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். எந்தவிதமான செயற்கை வண்ணங்களையும் இனிப்பு சுவை கூட்ட எவ்வித மான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது. பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை உணவு பாது காப்பு உரிமம் பெற்று பாது காப்பான நீரில் தயாரிக்கப் பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைக்களில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைக்களில் மட்டுமே வழங்க வேண்டும். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும்போது வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களின் வாய்ப்புறம் சீலிட்டு மூடி யிருத்தல், காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். இத்த கைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொது மக்களுக்கு தரமான, பாது காப்பான குளிர்பானங்கள், பழச்சாறுகளை வழங்க கடலூர் மாவட்ட நிர்வாகம் உணவு வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொது மக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு 04142-221081 அல்லது 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்க லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்