search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம்  உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்  - வருகிற 19-ந்தேதி நடக்கிறது
    X

    உடையார் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் - வருகிற 19-ந்தேதி நடக்கிறது

    • கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் வரும் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பழமையும் புராணச் சிறப்பு கொண்டதாகும்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் ஆலயம். சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பழமையும் புராணச் சிறப்பு கொண்டதாகும்.

    அகஸ்தியரால் வழிபடப் பட்ட பெருமையும் உடைய ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு வருகிற 19-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

    வெகு காலங்களுக்குப் பின்பு தற்போது தான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான கால் நாட்டுதல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    100-க்கும் மேற்பட்டோர் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடையார் சாம்பியன்ஸ் கிளப் நண்பர்கள் மற்றும் கீழக்கடையம் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×