search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை அருகே சுடுகாடு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக் கூடாது
    X

    பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் அரவிந்த் மனுக்கள் பெற்ற போது எடுத்தபடம்.

    தோவாளை அருகே சுடுகாடு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக் கூடாது

    • குறைதீர்க்கும் நாளில் ஆதிதிராவிட மக்கள் மனு
    • கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மனு அளித்தனர். குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மரணம் அடைந்தால் அடக்கம் செய்வதற்காக காற்றாடி விளை பகுதியில் அமைந்து உள்ள சுடுகாட்டை 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    அங்கு சுடுகாடு மற்றும் இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டில் பல கல்லறைகளும் அமைந்து உள்ளன. இந்த நிலையில் கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    இதனால் ஆதிதிராவிடர் மக்கள் பாதிக்கப்படுவார் கள். எனவே அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 200 ஆண்டு களாக பயன்படுத்தி வரும் சுடுகாடு நிலத்தை ஆதி திராவிட மக்களுக்காக கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×