search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்
    X

    யாக சாலை பூஜைகள் நடத்த குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்த காட்சி.

    பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்

    • 27 யாக குண்டங்கள் அமைப்பு
    • கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5 மணிக்கு தீபாராதனையும் மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி பூஜை தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி காலை 7 மணிக்கு பூர்ணகிரி, கோ பூஜை, தீபாராதனை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை ,தனலட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை இரவு 8 மணிக்கு வயலின் இசை நடக்கிறது.

    24-ந்தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரியா பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலை பூஜை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந்தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை கிரிய பூஜை காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடகம் எடுத்து வந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் அலங்கார தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தமும் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம் பி ,தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபி ஷேகத்தையொட்டி திருப்பணிகள் முடிந்து தற்போது கோவில் வளாகத் தில் 27 யாக குண்டங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

    கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடி மரத்தில் பொருத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல் பகுதி யில் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×