search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி தொடங்குகிறது
    X

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில்

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி தொடங்குகிறது

    • விழாவின் சிகர நிகழ்ச்சி யான கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
    • விழாவையொட்டி தினமும் காலை, மாலை மங்கல மற்றும் தேவார இசை, வேதபாராயணம் ஆகிவை நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பூதப் பாண்டியில் சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்க சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை மங்கல மற்றும் தேவார இசை, வேதபாராயணம் ஆகிவை நடைபெறுகிறது.

    22-ந்தேதி காலை 4.30 மணிக்கு மங்கல இசை, 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. காலை 5 மணிக்கு 4-ம் காலயாக சாலை கிரிய பூஜை ஆரம்பமாகிறது. 5.30 மணிக்கு பிரம்மசுத்தி, ஆலயசுத்தி, ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

    காலை 6.30 மணிக்கு யாத்ராதானம், 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல், காலை 7.35 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவார விமானம் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தம், இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி, பஞ்சமூர்த்தி தரிசனம் உலா ஆகியவை நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×