search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு தயார்
    X
    கோப்பு படம் 

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு தயார்

    • வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
    • பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

    நாகர்கோவில்:

    சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    Next Story
    ×