என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புறத்தூய்மை பரிசோதனை செய்த விதைகளை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்
- கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
- நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் விதைகள் அதிக அளவு சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதை குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகளை உடனடியாக விற்பனைக்கோ, நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருக்காது.
அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே இந்த விதைகளை சுத்தமாகவும், பிற பொருட்கள் கலப்பு இன்றியும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். சுத்தமான விதைகள் விதைப்பின் போது சீராக விதைப்பதற்கும் வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும். நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளுக்கு புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புறத்தூய்மை சோதனையின் போது தூய விதைகள், களை விதைகள், பிறரக விதைகள் மற்றும் உயிர்ப்பற்ற பொருட்கள் கலந்து உள்ளனவா என கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச தரங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.
எனவே விதை மாதிரிகளில் புறத்தூய்மை பரிசோதனை செய்து நல்விதையாக விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.