search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு
    X

    குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் உற்சாக குளியலிட்டு வருகிறார்கள். அவர்களுடன் வரும் சிறுவர்-சிறுமிகளும் அங்குள்ள நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட காட்சி.

    மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு

    • பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
    • திற்பரப்பு அருவியில் சிறுவர்கள் உற்சாக குளியல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மழை ஓய்ந்திரு ந்தாலும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    நேற்று திருவட்டார், அருமனை பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சுருளகோடு பகுதியில் 25 மில்லி மீட்டரும் பெருஞ் சாணி அணைப் பகுதியில் 22.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 20.8 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணைப் பகுதியில் 4.8, கன்னிமாரில் 4.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இந்த மழையின் காரண மாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணைக்கு 821 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 243 கனஅடி நீரும், சிற்றாறு-1 அணைக்கு 157 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்ப டுவது நேற்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அணையில் இருந்து மீணடும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×