search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் ராமர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி
    X

    கொட்டாரம் ராமர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம்.

    கொட்டாரம் ராமர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி

    • பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு
    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாநாளை (வியாழக்கிழமை) தொடங்கு கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரைதொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டிநாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 5.15 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமும் 7 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. கொட்டாரம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பஜனை குழுவினர் இந்த ஜெபத்தை நடத்துகிறார்கள். மாலை 5மணிக்குபஜனையும் இரவு 7 மணிக்கு தீபாராதனையும் இரவு 7.15 மணிக்குஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.

    2-வது நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 5.15 மணிக்கு கலச பூஜையும், 8 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், விபூதி, களபம், பன்னீர், நெய், பச்சரிசி மாவு, உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடக்கிறது. 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது பகல் 11.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும் 6.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டு வடை, குங்குமம், விபூதி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி வகைகளும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துஉள்ளது. இதற்காக 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    Next Story
    ×