search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் தற்காலிகமாக நிறுத்தம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை படத்தில் காணலாம் 

    பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் தற்காலிகமாக நிறுத்தம்

    • ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்
    • 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர்.

    கன்னியாகுமரி:

    தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தர்மபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக தலைவர் ரெங்க நாயகி கணேசன், ஊராட்சி செயலர் பாமா ஆகியோர் சம்பவ இடம் சென்றனர்.

    அவர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் ஆட்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், வயதான முதியோர்கள், குழந்தைகள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்கு ளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராம லெட்சுமி (பொறுப்பு), ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செய்யது அலி பாத்திமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனக பாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள், நாங்கள் வசித்து வரும் குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்து மாற்று இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் வறுமை யில் உள்ளோம். எங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து நாங்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் தந்து உதவ வேண்டும், முடியாத பட்சத்தில் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    இதன் பேரில் அதிகாரிகள் தற்காலிகமாக ஆக்கிர மிப்பு அகற்றுவதை நிறுத்தி வைத்து உள்ளனர்.

    Next Story
    ×