search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
    X

    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை

    • சிறப்பு பிரார்த்தனையில் ஆயர்கள் பங்கேற்பு
    • புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நாகர்கோவில்:

    2023-ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.45 மணிக்கு கோட்டார் மறை மாவட்டம் ஆயர் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கிருந்த வர்கள் புத்தாண்டு வாழ்த் துக்களை பரிமாறிக் கொண் டனர்.

    சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையா தலைமையில் மருதூர் குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை நடந்தது.கொற்றிகோடு மீட் நகர் சி.எஸ்.ஐ. ஆலயம், எஸ்.டி. மங்காடுவாவறை சாரோன் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இன்று காலையில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் செல்லையா கலந்து கொண்டார்.

    நாகர்கோவில் அசிசி ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நள்ளிரவு 12 மணிக்கு பொதுமக்கள் வீதிகளில் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி யும் புத்தாண்டை வரவேற்ற னர். நண்பர்களும் உறவி னர்களும் ஒருவருக்கொருவர் இரவு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்த நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக இருந்தது. இன்று காலை யில் சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் கடலில் கால் நனைப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். கடற்கரை ஓரங்களில் குடும்பத்தோடு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். வீடுகளில் இருந்தபடியும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×