என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு சொகுசு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேசன் அரிசி பறிமுதல்
- சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர்.
- கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் இருந்து சொகுசு காரில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.