search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாத திருவாதிரையையொட்டி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
    X

    புரட்டாசி மாத திருவாதிரையையொட்டி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

    • 6-ந்தேதி நடக்கிறது
    • கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி குகநாதீ ஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்தி ரத்தன்று 1008 சங்காபி ஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான வருகிற 6-ந்தேதி காலை 10.30 மணிக்கு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாரதனையும், 12.30 மணிக்கு வாகன பவனியும் நடக்கிறது. பலவண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு 1 மணிக்கு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுளை கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×