என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் தேங்காய் வியாபாரி வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
- வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
- இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
நாகர்கோவில்:
வெள்ளிச்சந்தை அம்மாண்டிவிளை சாந்தான் விளை பகுதியை சேர்ந்தவர் கவியரசு (வயது 34). தேங்காய்வியாபாரி. இவர் தற்பொழுது நாகர்கோவில் செட்டிகுளம் கணபதி நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கவியரசு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவியரசு வீட்டிற்குள் சென்று பார்த்தார்.அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. படுக்கை அறையில் உள்ள சிலாப்பில் துணிப்பையில் கட்டி போடப்பட்டிருந்த 15 பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது. திருட்டு போன நகையின் மதிப்பு ரூ 7 லட்சம் ஆகும். இதுகுறித்து கவியரசு கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.கவியரசு வீட்டிலிருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது .இந்த நிலையில் வீட்டை உடைத்தும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் .அடுத்தடுத்து நடந்து வரும் இந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.