என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை பகுதியில் மாயமான 211 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்
    X

    தக்கலை பகுதியில் மாயமான 211 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்

    • செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன
    • வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் அடிக்கடி செல்போன்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதன் பலனாக செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன. அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சூழலில் தக்கலை பகுதியில் மாயமான செல்போன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 211 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

    அவற்றை உரியவர்க ளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தக்கலையில் இன்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மீட்கப்பட்ட செல்போன்களை உரிய வர்களிடம் ஒப்படைத்தார்.

    துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேல் முருகன், எழிலரசு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×