என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
- ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- ஜூலை மாதம் நேற்று வரை 11 ஆயிரத்து 893 பேரும் தரிசனம் செய்துள்ளனர்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இது வரை 25 லட்சம் பக்தர்கள் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
இந்த திருப்பதி வெங்க டாஜலபதி கோவில் திறக்கப்பட்ட 2019-2020-ம் ஆண்டில் 9 லட்சத்து 78 ஆயிரத்து 465 பேரும், 2020-2021-ம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 805 பேரும், 2021-2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேரும், 2022-2023-ம் ஆண்டில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 548 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 77 ஆயிரத்து 684 பேரும், மே மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 865 பேரும், ஜூன் மாதம் 64 ஆயிரத்து 651 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.
இந்த ஜூலை மாதம் நேற்று வரை 11 ஆயிரத்து 893 பேரும் தரிசனம் செய்துள்ளனர். இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.