search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25¾ பவுன் நகை மீட்பு
    X

    கோப்பு படம் 

    25¾ பவுன் நகை மீட்பு

    • கொள்ளையடித்த பணத்தை ஜாலியாக செலவு செய்தேன் என கைதான வாலிபர் வாக்குமூலம்
    • நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.

    இதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முர ணான தகவல்களை தெரி வித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மணவா ளக்குறிச்சி போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜோஸ் (வயது 30) என்பது தெரிய வந்தது.

    இவர்குமரி மாவட்டம் மட்டு மின்றி கேரளாவில் பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டி இருப்ப தும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் எட்வின் ஜோசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 25¾ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட எட்வின் ஜோஸ் மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, கருங்கல், மார்த்தாண்டம், நித்திர விளை போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதி களில் கடந்த 6 மாதத் தில் 20 இடங்களில் கைவரிசை காட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    நான் கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். படிப்பு செலவுக்காக ஓய்வு நேரத்தில் கட்டுமான வேலைக்கு சென்று வந்தேன். எனக்கு செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதை யடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தேன். மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு பகுதியாக சென்று நகைகளை திருடினேன். போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஒவ்வொரு முறை ஒவ்வொரு பகுதிக்கு சென்று கைவரிசை காட்டுவேன்.குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளேன்.

    கைவரிசை காட்டிய நகைகளை அடகு வைத்து வரும் பணத்தை ஜாலியாக செலவு செய்தேன். பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாவும் சென்று உல்லாசமாக வாழ்க்கையை நடத்தி வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட எட்வின் ஜோசை போலீசார் இரணி யல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட எட்வின் ஜோஸ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×