search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

    • ரெயிலில் கடத்தி வந்த 3½ கிலோ குட்கா பறிமுதல்
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் நேற்று வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் இளங்கடையை சேர்ந்த அசோக் (வயது 25), வல்லன் குமாரன்விளையைச் சேர்ந்த அருள் செல்வன் (30), தியாகராஜன் பழவிளையை சேர்ந்த ஜெனித் (21) என்பது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கஞ்சா சென்னையிலிருந்து வாங்கி வருவதாக தெரிவித்த னர். தொடர்ந்து போலீசார் நான்கு பேரிடமும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.நேற்று புனேவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் அனாதையாக பை ஒன்று கிடந்தது.போலீசார் அதை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3½ கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை கொண்டு வந்தவர்கள் குறித்த விப ரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×