என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திக்குறிச்சியில் 40 ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியது
- திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வயல் வழியில் வெள்ளம் செல்கிறது.
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு, ஒருநூறாம்வயல், கற்றுவா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழையும், கனமழையும் பெய்து வருவதால், நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.இதனால் ஆறுகள், கால்வாய்கள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பிரதான, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குமரியில் உள்ள பிரதான அணை களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1,சிற்றாறு -2 ஆகிய அணைகள் முழு கொள்ள ளவை எட்டி வருகிறது.மேலும் அதிக அளவில் வெள்ளம் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.இந் நிலையில் சிதறால் மலை கோயிலை அடுத்த திக்குறிச்சி ஏலா பகுதியில் 40 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாழை மரச்சீனி, தென்னை ஆகியவை மூழ்கியுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வயல் வழியில் வெள்ளம் செல்கிறது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.