என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கடை அருகே ஆட்டோவில் கடத்திய 750 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
- ஆட்டோவில் 4 கேன்களில் 120 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
- 18 கேன்களில் பறிமுதல் செய்த 750 லிட்டர் மண்எண்ணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே அம்சி பகுதியில் நேற்று தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் நிலைய ஏட்டு ரமேஷ் ஆகியோர் அந்த வழியாக சென்ற கேரளா பதிவு எண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த ஆட்டோவில் 4 கேன்களில் 120 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதி புல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்த ஜஸ்டின் மகன் ராஜேஷ் (வயது 28) என்பவர் இவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.
மேலும் விசாரித்ததில் இவற்றை இனயம்புத் தன்துறை பகுதி
33-ம் அன்பியத்தை சேர்ந்த நெப்போலியன் (40) என்பவர் வீட்டில் இருந்து வாங்கி செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து நெப்போலியன் வீட்டில் போலீசார் சோதனையிட் டனர்.
அப்போது வீட்டில் இருந்து மேலும் 14 கேன் களில் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
மொத்தம் 18 கேன்களில் பறிமுதல் செய்த 750 லிட்டர் மண்எண்ணை மற்றும் ஆட்டோவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.