என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா செடி வளர்த்த வாலிபர் மீது வழக்கு
- குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை
- இருளப்பபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்,
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் அந்த கஞ்சா செடியை கைப்பற்றினார்கள் இதுகுறித்து இருளப்பபுரத்தைச் சேர்ந்த சுதன் மீது (வயது 21) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.