என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வடசேரியில் இன்று காலை சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி நின்ற லாரி வடசேரியில் இன்று காலை சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி நின்ற லாரி](https://media.maalaimalar.com/h-upload/2023/11/11/1980252-1.webp)
வடசேரியில் இன்று காலை சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி நின்ற லாரி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது
- 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் கொல் லங்கோடு பகுதியை சேர்ந்த வர் இர்வின் (வயது 50), லாரி டிரைவர். இவர் ஈரோடு பெருந்துறையில் இருந்து களியக்காவிளை அருகே பனச்சமூட்டிற்கு லாரியில் மாட்டு தீவ னங்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டார். இன்று அதிகாலையில் வட சேரி அண்ணா சிலை யிலிருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. திடீரென ரோட் டின் நடுவே வைக்கப்பட்டி ருந்த தடுப்பு கற்கள் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன் சக்கரமும் உடைந்தது.
இதைத்தொடர்ந்து லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடுரோட் டில் லாரி தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. இதுகுறித்து நாகர்கோ வில் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த டிரை வர் இர்வினை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டனர். வடசேரியில் இருந்து பார்வதிபுரம் நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. வட சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லை மற்றும் வெளியூர்க ளுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது.
ஆனால் லாரி விபத்தில் சிக்கிய பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்ட தையடுத்து போலீசார் அந்த பகுதியில் நின்று அதை சரி செய்யும் பணியை மேற் கொண்டனர். காலை நேரம் என்பதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து சென்றன.
விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியை போலீசார் மேற்கொண்ட னர். லாரியில் இருந்த மாட்டு தீவன மூட்டைகள் இறக்கி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து கிரைன் மூலமாக லாரியை அகற்றும் பணியை போலீசார் மேற் கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் லாரியினுடைய ஸ்டேரிங் உடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக லாரி டிரைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத் திற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.