என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ
- மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு
- மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பு
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் இருந்த மின்இணைப்பில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பொறிகள் வந்தது.
இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
உயர் மின்னழுத்தத்தின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில அலுவலகங்களில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டது.
மதியம் வரை மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story






