என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் ஓழுகினசேரியில் இந்து மகா சபா மாநில தலைவர் கார் மீது வாகனம் மோதியது
- பஞ்சரான அந்த கார் நேராக தீயணைப்பு நிலைய காம்பவுண்ட் சுவர் மீதும் மோதி நின்றது
- போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில், நவ.1-
குமரி மாவட்ட இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் இன்று பகல் நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகின சேரி செல்லும் ரோட்டில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார்.
பாலசுப்பிரமணியம் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். தீயணைப்பு நிலையம் அருகே கார் சென்ற போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோதியது. அந்த கார் திடீரென பஞ்சரானதால் தாறு மாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.பால சுப்பிரமணியம் வந்த கார் மீது பயங்கரமாக மோதியதோடு மட்டுமல்லாது பஞ்சரான அந்த கார் நேராக தீயணைப்பு நிலைய காம்பவுண்ட் சுவர் மீதும் மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் 2 கார்களும் பலத்த சேதம டைந்தன. ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பஞ்சரான கார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. இது தொடர்பாக போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.