search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரையுமன்துறையில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை
    X
    இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    இரையுமன்துறையில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • மீனவர்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள இரையுமன்துறையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட் டம் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று இரையு மன் துறை மற்றும் தேங்காப் பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது இரையுமன் துறை பகுதி மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மீனவர்களின் நலன் கருதி, கடல் சீற்றம் அதிகமாக உள்ள பகுதிகளில்தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரையுமன்துறை மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதி களின் கோரிக்கை யினை ஏற்று, அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைப்ப தற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.77 கோடி செலவில் அலைத்தடுப்பு நீட்டிப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் ரூ.60 கோடியில் கூடுதல் உள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேங்காப்பட்டணம் கடற் கரை கிராமங்களில் நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும், மீனவர்களின் கோரிக்கையை அரசுக்கு உடனடியாக கருத்துரு அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது பத்மநாபபு ரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் காசி நாதபாண்டியன், மீன்பிடித் துறைமுக செயற்பொறி யாளர் சிதம்பர மார்த்தாண் டன், கிள்ளி யூர் தாசில் தார் அனிதா, உதவி செயற் பொறியாளர் நடராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×