search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து கிராமிய கலை குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
    X

    நாகர்கோவிலில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து கிராமிய கலை குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

    • பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதிக்கப்படாத ரத்தம், தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவ வாய்ப்பு என நான்கு வழிகளில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுகிறது
    • கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பில்லாமல் பிறக்க அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.

    நாகர்கோவில் :

    எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந்தேதி "உலக எய்ட்ஸ் தினம்" அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் குறித்து கிராமிய கலை குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி வடசேரி பஸ் நிலையத்தில் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் டாக்டர் பெடலிக்ஸ் ஷமிலா தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதிக்கப்படாத ரத்தம், தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவ வாய்ப்பு என நான்கு வழிகளில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் எச்.ஐ.வி. பரவாது. கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பில்லாமல் பிறக்க அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். அதற்கான மருந்து எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் ஆரோக்கி யமாக பிறக்கும்.

    அனை வரும் அனைத்து அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏ.ஆர்.டி. எடுத்துக்கொண்டால் வைரசை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் பொதுமக்க ளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மேற்பார்வையாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த கலைக்குழுவினர் மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய பாடல்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

    Next Story
    ×