என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய புகாரில் 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்16 Jun 2022 1:07 PM IST
- இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை
- செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே குழித்துறை ஆத்துக்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்துவதாக வந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த மினி வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி னர். டிரைவர் தப்பி ஓடி விட்ட நிலையில் போலீசார் வேனை சோதனை செய்த போது அனுமதியின்றி செம்மண் கடத்துவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மினி வேனையும் பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சிதறால் செல்வராஜ். பத்துகாணி வினோத், மடிச்சல் திலீப் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×